புதுடெல்லி: இந்தியாவில் வாட்ஸ்அப் செயலி மூலம் பணம் அனுப்பும் புதிய சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு வாட்ஸ்அப் நிறுவனம் சுமார் 1 மில்லியன் பயனர்களுடன் ‘வாட்ஸ்அப் பே’ சேவையை, சோதனை முறையில் துவங்கியது. அதற்கு அரசு அனுமதி அளிக்காததால், வாட்ஸ்அப் தனது பயனர்கள் அனைவருக்கும் இச்சேவையை வழங்கவில்லை.
இந்நிலையில், ‘வாட்ஸ்அப் பே’ சேவையை நாடு முழுதும் உள்ள பயனர்களுக்கு வழங்க, யுபிஐ இயங்குதளத்தை இயக்கும் என்.பி.சி.ஐ. தற்போது அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் சாட் பாக்சில் இருந்தபடி பணம் அனுப்ப முடியும். முதற்கட்டமாக இந்த அம்சம் 2 கோடி பேருக்கு வழங்கப்பட உள்ளது.
பணம் அனுப்புவது மட்டுமின்றி பண பரிமாற்ற விவரங்கள், முந்தைய பரிமாற்ற தகவல்கள் உள்ளிட்டவைகளை கூட எப்போது வேண்டுமானாலும் பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கூகுளின் ‘ஜி பே’ மற்றும் ‘போன் பே’ நிறுவனங்களுக்கு போட்டியாக, ‘வாட்ஸ்அப் பே’யும் இருக்கும் என்று கூறப்படுகிறது.