கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

இனி இ-பாஸ் கட்டுப்பாடு கூடாது! (அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம்)

டெல்லி, ஆக.23&
மாநிலத்துக்குள் பயணங்களை மேற்கொள்ள பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இ&பாஸ் முறை ரத்தாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அவசரப் பயணங்கள் மேற்கொள்ள இ&பாஸ் நடைமுறை தமிழகத்தில் அமலில் இருந்தது.
இந்த நடைமுறைக்கு பலதரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ&பாஸ் அளிக்கப்படும் என்றும், இருப்பினும் மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அவசர கடிதம் அனுப்பியுள்ளது.
அதில்,” மாநிலத்துக்குள் ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள எவ்வித தடையும் விதிக்கக் கூடாது.
இதேபோன்று, மாநிலங்களுக்கு இடையேயும் மக்கள் பயணம் மேற்கொள்ளவும், சரக்குப் போக்குவரத்துக்கும் தடை எதுவும் விதிக்கக் கூடாது. இவ்வாறு தடைகள் விதித்தால், அது கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு விதித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிரானது.
மத்திய அரசின் விதிமுறை
களை மீறுவதாகும்“ என்று உள்துறை அமைச்ச
கத்தின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உள்துறை அமைச்ச
கத்தின் இந்த அறிவுறுத்தல் குறித்து உரிய ஆலோசனை மேற்கொண்டும், தமிழகத்தில் கொரோனா களநிலவரத்தை கருத்தில் கொண்டும் முடிவெடுக்கப்படும்“ என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தாலும், இ-பாஸ் நடைமுறை தற்போது எளிமையாக்கப்பட்டுள்ள நிலையில், உள்துறை அமைச்
சகத்தின் இந்த
அறிவுறுத்தலையடுத்து இ&பாஸ் முறை
முழுவதுமாக ரத்து
செய்யப்பட வாய்ப்புள்ள
தாகவே தெரிகிறது.