கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

இங்கிலாந்து அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் மார்கஸ் ட்ரெஸ்காதிக்

டெல்லி, மார்ச்.02
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் மார்கஸ் ட்ரெஸ்காதிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பொறுப்பை மார்கஸ் ட்ரெஸ்காதிக் மார்ச் இரண்டாம் வாரத்தில் இருந்து ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக 2000 ஆம் ஆவது ஆண்டில் அறிமுகமானார் மார்கஸ் ட்ரெஸ்காதிக். ivermectina posologia infantil
இதுவரை 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5825 ரன்களை எடுத்துள்ளார். அதில் 14 சதமும் 29 அரை சதமும் அடங்கும். iberbertina அதிகபட்சமாக 219 ரன்களை விளாசியுள்ளார் ட்ரெஸ்காதிக்.
அதேபோல ஒரு காலத்தில் இங்கிலாந்துக்கு ஒருநாள் போட்டியில் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தார் ட்ரெஸ்காதிக். இங்கிலாந்து அணிக்காக மொத்தம் 123 போட்டிகளில் விளையாடி 4335 ரன்களை எடுத்துள்ளார். அதில் மொத்தம் 12 சதங்களும் 21 அரை சதங்களும் அடங்கும். தொடர்ந்து சிறப்பாக விளையாடினாலும் இடையே காயத்தால் அவதிப்பட்டார் மார்கஸ் ட்ரெஸ்காதிக். using horse ivermectin for rosacea இதனையடுத்து 2008 இல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார் ட்ரெஸ்காதிக்.
இப்போது சோமர்செட் கவுண்ட்டி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார் மார்கஸ் ட்ரெஸ்காதிக். இதனையடுத்து தற்போது பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் ரிச்சர்ட் டாவ்சன் விலக்கப்பட்டு கிளவுசெட்ஷையர் கவுண்ட்டி அணியின் பயிற்சியாளராக பணியமர்த்தப்படுகிறார்.