கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது!

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா நோய் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க, தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து கடைகள், ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

உணவகங்கள், தேநீர் கடைகளில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி அவைகள் இரவு 11 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் 50% விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி.

பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை. வாடகை டாக்ஸியில் ஓட்டுநர் உட்பட மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி. ஆட்டோக்களில், ஓட்டுநர் உட்பட 2 பேருக்கு மட்டுமே அனுமதி.

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி.

திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க அனுமதி. இறுதி ஊர்வலத்தில் 50 பேர் மட்டுமே அனுமதி. தியேட்டர்களில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி. விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களின்றி நடத்த அனுமதி.

கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை கடைகள் மட்டும் வரும் 10ம் தேதி முதல் செயல்பட தடை. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வர இ- பதிவு முறை தொடரும். நீச்சல் குளங்களில் விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி

தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை தொடரும்.

பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளருடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள், பொது மக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதையும் முகக்கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து அனுமதிக்க வேண்டும். முகக் கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்க கூடாது.

இன்று முதல் அமுலுக்கு வரும் இந்த கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் 30 தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.