கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

புக்கிங் செய்ய புதிய முறை இன்று முதல் அமல்! (ரயில் புறப்படும் 5 நிமிடத்திற்கு முன்பு வரை டிக்கெட்டை முன்பதிவு செய்ய அனுமதி)

டெல்லி, அக்.10
இனிமேல் ரயில் புறப்படும் 5 நிமிடத்திற்கு முன்பு வரை டிக்கெட் எடுத்துக் கொள்ள முடியும். அக்டோபர் 10ம் தேதியான இன்று முதல், இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.
கொரோனா லாக்டவுனுக்கு முன்பு, ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்பாக 2வது சாட் ரெடியாகி வந்தது. கொரோனா காலத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில், 2வது சாட் ரயில் புறப்படும் 1 மணி நேரங்களுக்கு முன்பாக தயாராகி வந்தது. இப்போது அதில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில், 2வது சாட் ரயில் புறப்படும் 1 மணி நேரங்களுக்கு முன்பாக தயாராகி வந்தது. இப்போது அதில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இனி ரயில் நிலையங்களிலிருந்து ரயில்கள் புறப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் இரண்டாவது முன்பதிவு சாட் ரெடியாகும். இன்று முதல் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.
ரயில்வேக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட இந்த விதிமுறை பயன்படும். ஏனெனில் முடிந்த அளவுக்கு, அதிகம் பேர் புக்கிங் செய்ய வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது சாட் தயாரிக்கப்படும் வரை ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்பதுதான் இந்த விதிமுறையின் அர்த்தம். நாளை முதல், சாட் ரயில், புறப்படுவதற்கு 5 நிமிடங்கள் முன்பு வரை வரை தயாரிக்கப்படும் என்பதால், ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடம் முன்பு வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாமாம்.
டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறும் விதிமுறைகளின் படி, இந்த காலகட்டத்தில் டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம்.
கொரோனா லாக்டவுன் காலத்திற்கு பிறகு இப்போது நிலைமை மாறியுள்ளது. ரயில்வே பல புதிய ரயில்களை இயக்கத் தொடங்கியுள்ளது.
பண்டிகை காலம் வரும் நிலையில், ரயில்வே ஏற்கனவே புதிய சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான தேதியை இதுவரையில் அறிவிக்கவில்லை, ஆனால் அவை அக்டோபர் 15 முதல் நவம்பர் 30 வரை இயக்கப்பட உள்ளது.