கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவி தற்கொலை! (உருக்கமான ஆடியோ பதிவு சிக்கியது)

மதுரை, செப்.13&
மதுரையில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி துர்காவின் உடல் தகனம் செய்யப்பட்டது. தத்தனேரி மயானத்தில் மாணவி உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. நீட் அச்சத்தால் சார்பு
ஆய்வாளர் முருகசுந்தரத்
தின் 19 வயது மகள் ஜோதி ஸ்ரீ துர்கா தூக்கிட்டு
தற்கொலை செய்து கொண்
டார். இன்று நடைபெற
வுள்ள நீட் தேர்வுக்காக படித்து வந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி துர்காவின் உடற்கூராய்வு நிறைவு பெற்றது. பின்னர் மதுரை மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்தபின் ஜோதி துர்காவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.தத்தனேரி மயானத்தில் மாணவி உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. மாணவி உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில், நேற்று மதுரையைச் சேர்ந்த சார்பு ஆய்வாளரின் 19 வயது மகள் ஜோதி துர்கா என்ற மாணவி நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில், நீட்தேர்வு குறித்து பயமாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்து வந்தார். ஆனால், அவரை அவரது பெற்றோர் ஆசுவாசப்படுத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று தனி அறையில் படித்துக் கொண்டிருக்கும் போது, நீட் தேர்வு பயத்தால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட்டால் தொடர்ந்து பாதிப்பு வருவதை மத்திய அரசு உணர மறுக்கிறது