கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

மேட்டூர் அணை 100 அடியை எட்டியது! (66 வது முறையாக நிரம்பி சாதனை டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி)

மேட்டூர், செப்.26&
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருதால், அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்பட அணைகள் நிரம்பி உள்ளன.
இதனால் அணைக்கு வரும் உபரி நீரை அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் நீர்வரத்து, ஒகேனக்கல் அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.வினாடிக்கு அதிகபட்ச
மாக 75,000 கனஅடி வரை உபரிநீர் திறக்கப்பட்டது.
கடந்த 21ஆம் தேதி முதல் கர்நாடக அணைகளின் உபரிநீர் மேட்டூர் அணைக்கு வர தொடங்கியது. உபரிநீர் வரத்து காரணமாக கடந்த 21ஆம் தேதி காலை 81.77 அடியாக இருந்த மேட்டூர் அணை
நீர்மட்டம் தற்பொழுது 100 அடியாக உயர்ந்
துள்ளது. கடந்த 4 நாட்
களில் மட்டும் மேட்டூர்
அணையின் நீர்மட்டம் 10 அடி வரை உயர்ந்தி
ருக்கிறது.மேட்டூர் அணை நீர்மட்டம் 66வது
முறையாக 100 அடியை எட்டியுள்ளது என பொதுப்
பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.