கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

மருத்துவ மாணவர் சான்றிதழை ஆய்வு செய்ய 5 பேர் குழு! (வெளிமாநிலத்தவர் இடம்பெறுவதை தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை)

சென்னை, நவ.20
தமிழகத்தில் நடைபெறும் மருத்துவ கவுன்சிலிங்கில் மாணவ, மாணவிகளின் இருப்பிடச் சான்றிதழை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்காக, நேற்று முன்தினம் முதல்,
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மருத்துவ
கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு மருத்துவ கலந்தாய்வுக்கு வந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்
பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
மருத்துவ கலந்தாய்வுக்கு வருகை தந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் பங்கேற்று ஒதுக்கீடு ஆணை பெற்ற பிறகு நான்கு மாணவர்களுக்கு கொரோனா இருப்பதாக, பரிசோதனை
முடிவுகள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு கொரோனா நோய்த்
தொற்று அறிகுறி தென்படவில்லை. எனவே வீட்டு
கண்காணிப்பில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாணவர்களுடன் யார் யார் பழகினார்களோ, அவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களும் ஜாக்கிரதையாக இருக்கும்
படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் மருத்துவ படிப்பு கலந்தாய்வில் மொத்தம் 262 மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழ் சரிபார்க்க 5
பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
ஒரே மாணவர் வெவ்வேறு மாநிலங்களில் மருத்துவ கல்லூரி இடங்களுக்கு அப்ளே செய்வதால், இதை கண்டறிய
ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரே மாணவர் இரு இடங்களில், தரவரிசை பட்டியலில் வந்தால் அந்தந்த மாநிலங்களில் உள்ள மாணவர்களின் இடம் பறிபோக வாய்ப்பு இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த நிலையில்தான், இந்த குழுவை சுகாதாரத்துறை அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக செல்வராஜ் உள்ளார். ராஜிவ் காந்தி, ஓமந்தூரார் மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த மருத்துவர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.