கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் குறைந்தது கொரோனா பாதிப்பு! (பலி எண்ணிக்கையில் புதிய உச்சம்)

சென்னை, ஜுலை.31&
தமிழகத்தில் நேற்று 5864 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 239978 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் 6000-7000 கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர்.
சில நாட்கள் 7 ஆயிரத்
திற்கும் நெருக்கமான கேஸ்கள் வந்தன. இப்படி
ஒரு வாரமாக தினமும் 6 ஆயிரத்திற்கும் அதிக
மானவர்கள் வந்த நிலையில் நேற்று குறைந்
துள்ளது. அதேபோல் நேற்று சென்னையில் 1175 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக 98767 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 12785 ஆக உள்ளது. சென்னையில் நேற்று 2092 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சென்னை
யில் மொத்தமாக 83890
பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்
டுள்ளனர். தமிழகத்தில் மிக அதிகமாக நேற்று 97 பேர் பலியாகி உள்ளனர்.மொத்தமாக 3837 பேர் இதுவரை தமிழகத்தில் பலியாகி உள்ளனர் .
தமிழகத்தில் நேற்று
5295 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கி
றார்கள். இதுவரை மொத்
தம் 178178 பேர் தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கி
றார்கள். தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 57962 ஆக உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
நேற்று 61202 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 2597862 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் நேற்று 59437 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்
டுள்ளது. மொத்தமாக 2501919 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது.
சென்னைக்கு அடுத்து நேற்று செங்கல்பட்டில் 354 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 14197 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அது போல நேற்று திருவள்ளூரில் 325 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 13481 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.