கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியது! (மேலும் 21 பேர் உயிரிழப்பு)

சென்னை, ஜுன்10&
தமிழகத்தில் நேற்று
கொரோனா பாதிக்கப்பட்ட
வர்களின் எண்ணிக்கை
1685ஆக உயர்ந்துள் யதையடுத்து பாதிக்கப்
பட்டவர்களின் எண்
ணிக்கை 34,914ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு, திருவள்
ளூர் உள்ளிட்ட மாவட்டங்
களில் மின்னல் வேகத்தில்
கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது.
இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவ
டிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்
தில் கடந்த ஒரு வாரத்திற்கு
மேலாக கொரோனாவால் தினமும் பாதிக்கப்
பட்டவர்களின் எண்ணிக்கை
ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. அதே
வேளையில் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதுதொடர்பாக தமிழக
சுகாதாரத்துறை அமைச்
சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழ
கத்தில் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நேற்று 1,685 பேர் கொரோனாவால் பாதிக்கப்
பட்டுள்ளனர். இதனை
யடுத்து, தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்
டவர்களின் எண்ணிக்கை 34,914ஆக உயர்ந்துள்ளது.
இதில், சென்னையில் மட்டும் 1,243 பேர் நோய் தொற்று கண்டறியப்பட் டுள்ளதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 24,545ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் 158 பேர், காஞ்சிபுரத்தில் 32 பேர், மதுரையில் 16 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூரில் 90 பேர், திருவண்ணாமலையில் 16 பேர், வேலூரில் 16 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி, திருநெல்வேலியில் தலா 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 798ஆக உள்ளது.
எனவே குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 18,325ஆக அதிகரித்துள்ளது.
நேற்று 21 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 307ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 10வது
நாளாக பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்
தக்கது.