கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

மதுரையில் பென்னிகுவிக் வீடு விவகாரத்தில் ஆதாரம் கொடுங்கள்! (முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி)

சென்னை, ஆக.26
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் நேற்று (25ம் தேதி) கூட்டத்தொடரில், மதுரையில் பென்னிகுவிக் இல்லத்தை இடித்துவிட்டு கருணாநிதி நூலகம் கட்டுவதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக உறுப்பினருமான செல்லூர் ராஜூ குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அந்த இல்லம் பென்னிகுவிக் இல்லம் அல்ல. பென்னிகுவிக் மரணம் அடைந்தது 1911ம் ஆண்டு; இது கட்டப்பட்டது 1912 முதல் 1915 வரை உள்ள காலகட்டம். எனவே அது பென்னிகுவிக் இல்லமாக இருந்திருக்க முடியாது. எனவே, உறுப்பினர் தவறான கருத்தை பதிவு செய்யக் கூடாது என்றார். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்; முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பென்னிகுவிக் நினைவிடத்தை மாற்றி, அப்புறப்படுத்தி, அந்த இடத்திலே கலைஞர் பெயரால் அமைய இருக்கக்கூடிய நூலகம் கட்டப்பட இருக்கிறது என்ற ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார்.
ஏற்கெனவே இது சட்டமன்றத்திற்கு வெளியிலேயும் பேசப்
பட்டிருக்கிறது. அப்பொழுதும் பொதுப்பணித்
துறை அமைச்சர் மூலமாக தெளிவாக விளக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் சொல்கிறேன். நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். நிச்சயமாக அதை நாங்கள் மாற்றுவதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம். அதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. ஒரு தவறான பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். அது சட்டமன்றத்திலும் பதிவாகக்கூடாது என்பதற்காகத்தான் இந்த விளக்கத் தினை நான் சொல்லியிருக்கிறேன்.
இப்படிச் சொல்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள் ஒரு முன்னாள் அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது மூன்றாவது முறையாக அவைக்கு வந்திருக்கிறீர்கள். எனவே, நீங்கள் அப்படி சொல்வது உங்களுடைய பெருந்தன்மையை குறைப்பதாக இருக்கிறது. எனவே, ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள் என்றார்.