கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு புகார்

மதுரை, செப்.22&
மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல ஊராட்சிகளில் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் விவசாயி
களுக்கு வழங்கப்படும் கிசான் திட்டத்தில் கோடிக்
கணக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளது.இதில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்
பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
மோசடி செய்தவர்கள் போலி விவசாயிகள் மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் ஆகியோர் கைது செய்யப்
பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசின் மற்றொரு சிறந்த திட்டமான 100 நாள் வேலை திட்டத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் அதாவது ஊராட்சி மன்ற தலைவர்கள் இல்லாத காலகட்டத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பது சமூக தணிக்கை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழகம் முழுவதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது
தெரியவந்துள்ளது. குறிப்பாக, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் பல ஊராட்சிகளில் லட்சக்
கணக்கில் முறை
கேடுகள் மற்றும் நிதி
கொள்ளைகள் நிகழ்ந்தி
ருப்பது சமூக தணிக்கை அறிக்கையில் புள்ளிவிவரங்களுடன் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் மக்கள் பாதுகாப்பு கழக நிர்வாகி
மணிகண்டன் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் கோடிக்கணக்கில் முறை
கேடுகள் நடந்துள்ளது. இதுதொடர்பாக சமூக தணிக்கை அறிக்கையில் எந்தெந்த ஊராட்சியில் எவ்வளவு முறைகேடுகள் மற்றும் நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது
குறித்து தெளிவாக விளக்
கம் அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் சில குறிப்பிட்ட ஊராட்சிகளில் லட்சக்கணக்கில் முறை
கேடுகள் நடந்திருப்பது தணிக்கை அறிக்கை
யில் உறுதி செய்யப்பட்
டுள்ளது. இதுகுறித்து உடனடியாக அரசு அதிகாரிகள் நடவ
டிக்கை எடுக்க வேண்டும், தவறும் பட்சத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ள ஊராட்சிகள் மீதும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீதும் வழக்கு தொடரப்படும் என்றார்.
இதேபோல் தற்
போதும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் பல
ஊராட்சிகளில் முன்பை விட கூடுதலாக முறை
கேடுகள் நடப்பதாக
பொதுமக்கள் புகார் கூறு
கின்றனர். நூறு நாள்
வேலைத் திட்டத்தில் தற்போது பயனாளி
களுக்கு 250ரூபாய் வழங்கப்படுகிறது.
ஆனால் நூறு நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கு பல ஊராட்சிகளில் இந்த தொகையை முழுவ
துமாக வழங்கப்படுவ
தில்லை என புகார் கூறப்ப
டுகிறது. அதேபோல் பய
னாளிகளின் வங்கி கணக்கு புத்தகத்தை ஊராட்சி மன்ற
தலைவர்கள் வாங்கி வைத்துக்கொண்டு முறை
கேடுகளில் ஈடுபடுவதா
கவும் பல ஊராட்சிகளில் புகார் எழுந்துள்ளது.
இது குறித்தும் மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.