கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

மதுரை மாநகராட்சி வளாகத்தை கவனிக்க தவறினாரா கமிஷனர்? (ஒருமாதமாக வீணாகும் தண்ணீர்)

மதுரை, ஜூலை.29
மதுரை மாநகராட்சி புதிய கமிஷனராக டாக்டர் கார்த்திகேயன் பதவியேற்ற நாள் முதல் மதுரை நகரின் வீதிகளிலும் வீடுகளிலும் சுகாதாரக் கேடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார். சில பகுதிகளில் ஊழியர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் மாறுவேடத்தில் நகர் வலம் வருவதாக கூறுகிறார்கள்.
மதுரை நகரின் விரிவாக்க பகுதிகளில் கூட திடீர் ஆய்வு செய்யும் கமிஷனர் மாநகராட்சி வளாகத்துக்குள் கண்காணிக்க தவறிவிட்டார் என்ற புகார் எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சியின் வளாகத்துக்குள் அமைந்துள்ள எகோ பார்க் மதுரையில் உள்ள முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் காலை வேளைகளில் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த எகோ பார்க் மதுரையின் முக்கிய பொழுதுபோக்காக இருந்து வருகிறது. குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த எகோ பார்க் பராமரிப்பில் மோசமாக உள்ளது. அது ஒரு புறமிருக்க தண்ணீரின் தேவை பற்றியும் அதன் அவசியம் பற்றியும் தமிழக முதல்வர் பதவி ஏற்ற நாள் முதல் குறிப்பிட்டு வருகிறார். ஆனால் மாநகராட்சி வளாகத்தில் உள்ள எகோ பார்க்கில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தண்ணீர் வீணாகி வருகிறது. பலமுறை இது சம்பந்தமாக மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அங்கு நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள் கொந்தளிக்கின்றனர். மதுரை மாநகர் முழுவதும் மாறுவேடத்தில் ஆய்வு செய்து வரும் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் மாநகராட்சியின் வளாகத்திலேயே உள்ள எகோ பார்க்கை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.