கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

மதுரை ஆதீனம் முக்தி அடைந்தார் குரு முகூர்த்தத்திற்கான பணி தீவிரம்

மதுரை ஆதீனம் என்பது தமிழ்நாட்டின் மிக தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றாகும். இங்கு தலைவராக நியமிக்கப்படுபவர்கள் பீடாதிபதி, மடாதிபதி, ஆதீனம் என்று அழைக்கப்படுவர். மதுரை ஆதீனம் என்பது திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.. இன்றுவரை 292 பேர் இங்கே பீடாதிபதியாக இருந்துள்ளனர் . 292ஆவது ஆதீனமாக குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி என்பவர் இருந்து வருகிறார். 1980ஆம் ஆண்டிலிருந்து இவரே பீடாதிபதியாக இருக்கிறார்.
கொரோனா காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக யாரையும் சந்திக்காமல் இருந்துவந்தார். அதேபோல அறிவிப்புகளையும் உதவியாளர்கள் மூலமே அளித்துவந்தார். இச்சூழலில் பீடாதிபதி அருணகிரிநாதர் சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் அவர் நேற்று இரவு மரணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.
நேற்றிலிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு சைவ மடாதிபதிகள் பலரும் வந்து செல்கின்றனர். ஒருவேளை அருணகிரிநாதர் சித்தி (இறப்பு) அடைந்தால் அவருக்கான குரு முகூர்த்தம் எழுப்புவதற்கான இடம் தேடப்பட்டு வந்தது. மதுரை ஆதீனம் மடத்துக்கு அருகிலுள்ள இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான வசதிகள் இல்லாததால், மதுரை முனிச்சாலை பழைய தினமணி டாக்கீஸ் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கே பணிகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.
அருணகிரி நாதரை நேற்று நேரில் சந்தித்த மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உடல்நிலை குறித்து விசாரித்தார். அதற்குப் பின்னர் மதுரை ஆதீனத்திற்கு நேரில் சென்று, மதுரை ஆதினத்தின் முக்கிய அறைகளை ஆதீன வழக்கப்படி பூட்டி சீல் வைத்தார். மதுரை ஆதீனம் சித்தி அடையும் பட்சத்தில் அவருக்காக எழுப்பப்படும் குரு முகூர்த்த இடம் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார். இதற்குப் பிறகே இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.