கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

திட்டமிட்டபடி இன்று அறிவிக்கப்படுகிறது! (அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் யார்? உச்சகட்ட பரபரப்பில் தொண்டர்கள்)

சென்னை, அக்.07
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அடுத்த
ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற
வுள்ளது. ஆளுங்கட்சி
யான அதிமுகவை பொறுத்தவரை தேர்தல்
வெற்றிகளை தாண்டி, யார் முதல்வர் வேட்
பாளார் என்பதே தற்
போது அதிமுகவில் முக்கி
யமாக பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சினைகள் பெரிதான நிலையில், அதற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்
தில் முதல்வர் விவகாரம்
காரசாரமாக விவாதிக்கப்
பட்டது. எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே நேரடியாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்ப
டுகிறது. அதன்பின்னர், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது வரும் அக்டோபர் 7ஆம் (இன்று) தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அதிமுகவில் 11பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க இரு தரப்பிலும் சுமூக உடன்
பாடு எட்டப்பட்டு ஒப்புதல்
வழங்கப்பட்டு விட்டதா
கவும், எடப்பாடி பழனி
சாமி, ஓ.பன்னீர் செல்வம் சார்பில் அவர்களது ஆதரவாளர்கள் அக்குழுவில் இடம் பெற
வுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களுக்கான அதிகாரம் உள்ளிட்ட
வைகள் தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது.
மேலும், தனது கோரிக்கையை ஏற்று 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதால், எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக இருக்க எந்த ஆட்சே
பனையும் இல்லை என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து விட்டதாக தெரிகிறது. இதனால், திட்டமிட்டபடி இன்று அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாக உள்ளது என்றும் தள்ளிப்போட வாய்ப்பில்லை என்றும்
தகவல் வெளியாகி
யுள்ளன.