கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கோவில்பட்டியில் டி.டி.வி.தினகரன் போட்டி

சென்னை, மார்ச்.12
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அமமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலலை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம் என மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வெளியிட்டார்.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அமமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான 50 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். இன்னும் முழுமையாக கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில், தற்போது வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் குறிப்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரும் சட்டமன்ற தேர்தலில்
கோவில்பட்டி தொகுதியில் போட்டி
யிடுகிறார். அந்த தொகுதியில் ஏற்கனவே அதிமுக சார்பில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிடிவி தினகரனும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.