கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கோவாக்ஸின்-கோவிஷீல்ட் தடுப்பூசிகளை கலந்து போட்டால் எதிர்ப்பு சக்தி கூடும் (இந்திய மருத்துவ ஆய்வு மையம் அறிவிப்பு)

புதுடெல்லி, ஆக.09
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சனிக்கிழமையன்று கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய கோவிட் -19 தடுப்பூசிகளை கலப்பது தொடர்ப்பான ஆய்வின் மூலம், இந்த இரு வகை தடுப்பூசிகளையும் கலந்து போடும் போது, நோய் எதிர்ப்பு சக்தி மேலும் அதிகரிக்கிறது என்பதோடு, மிகவும் பாதுகாப்பானது எனவும் தெர்யவந்துள்ளது.
இந்தியாவில், பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் மற்றும் ஆக்ஸ்போர்டு- சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் ஆகியவை அவசர பயன்பாட்டிற்காக ஒப்புதலைப் பெற்ற முதல் இரண்டு கோவிட் -19 தடுப்பூசிகளாகும்.
அவை நாட்டில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது தவிர ஸ்பூட்னிக் வி தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் இந்தியாவில் ஒற்றை டோஸ் கோவிட் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிர்வகிக்கப்படும் ஒட்டுமொத்த கோவிட் -19 தடுப்பூசி அளவுகள் 50.62 கோடியை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இரவு 7 மணி தற்காலிக அறிக்கையின்படி, சனிக்கிழமை 50 லட்சத்திற்கும் அதிகமான டோஸ் வழங்கப்பட்டது. 18-44 வயதுடையர்கள் பிரிவில், சனிக்கிழமையன்று, 27,55,447 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5,08,616 இரண்டாவது டோஸ§ம் வழங்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.