கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கருணாநிதி, அன்பழகன் இடத்தில் துரைமுருகன் சட்டசபையில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பேச்சு

சென்னை, ஆக.24
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது இடத்தில்தான் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இருக்
கிறார் என சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறினார். சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பொன்விழா காணுகிறார். இது தொடர்பாக இன்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகியவற்றைத் தொடர்ந்து துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் இன்று முதல் தாக்கல் செய்யப்படவுள்ளன. முதல் நாளில் நீர்வளத் துறை மானியக் கோரிக்கையை அந்த துறை அமைச்சர் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த துறையின் அமைச்சராக இருப்பவர் திமுக பொதுச்செயலாளர், அவை முன்னவர், என்னுடைய மதிப்பிற்குரிய அண்ணன் துரைமுருகன். முதன் முதலாக இந்த அவையில் இந்த துறையின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுவது மகிழ்ச்சிக்குரியது பெருமைக்குரியது. நூறாண்டு வரலாறு கொண்ட இந்த சட்டசபைக்கு அரை நூற்றாண்டுக்கு முன்வந்தவர்தான் இங்கே அமைச்சராக இருக்கக் கூடிய அண்ணன் துரைமுருகன். 50 ஆண்டுகளாக இந்த சபை நடவடிக்கைகளில் பங்கேற்றுக் கொண்டிருக்கக் கூடியவர் அவர். இந்த மன்றத்தை அலங்கரிக்கும் முக்கிய உறுப்பினராக, மூத்த உறுப்பினராக இருப்பவர் அமைச்சர் துரைமுருகன். அதனால்தான் அவையின் முன்னவராக இருந்து வழிகாட்டுகிறார். மாபெரும் அரசியல் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு எனக்கு வழிகாட்டியாக இருப்பவர்தான் அண்ணன் துரைமுருகன். பொதுக்கூட்டங்களில் என்னை பற்றி சொல்லும் போது, இளம் வயது பையனாக ஸ்டாலினைப் பார்த்திருக்கிறேன் என்பார். இதனை அவர் பல மேடைகளில் சொல்லி இருக்கிறார். தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, அண்ணன் துரைமுருகனை கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் இடத்தில் வைத்துப் பார்க்கிறேன் என்றேன். அதுதான் உண்மை. அதைநான் இந்த சபையில் பதிவு செய்யவும் விரும்புகிறேன்.
இந்த கூட்டத்தை அழ வைக்க வேண்டும் என்று நினைத்தால் அழ வைத்துவிடுவார். இந்த கூட்டத்தை சிரிக்க வைக்க நினைத்தாலும் சிரிக்க வைப்பார். உங்களை உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டுமானாலும் அதை செய்வார். அமைதியாக இருங்கள் அண்ணா என்றாலும் இருந்துவிடுவார்.
தமிழக சட்டசபையில் 50 ஆண்டுகள் பங்கெடுத்து பொன்விழா நாயகராக துரைமுருகன் திகழ்கிறார். எப்போதுமே பொன் போன்று பளபளவென்று சட்டை போட்டுக் கொண்டு வருவார். புன்னகையும் அவரிடத்தில் இருக்கும். அத்தகைய பொன்விழா நாயகருக்கு பாராட்டு தெரிவிக்க இந்த தீர்மானத்தை முன்மொழிகிறேன். இதனை அனைவரும் நிறைவேற்றித் தர வேண்டும். தமிழக சட்டசபையில் 1971 முதல் தற்போது வரை 10 முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு துறைகளில் அமைச்சராக செயல்பட்டு மாநில வளர்ச்சிக்காகப் பாடுபட்டுள்ளார். பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவை மாண்பைக் காப்பதில் நல்ல வழிகாட்டி. அமைச்சர் துரைமுருகனை இந்த சபை பாராட்டுகிறது எனும் தீர்மானத்தை முன்மொழிகிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.