கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கர்நாடகாவின் மேகதாது அணை திட்டம் வராது! (தமிழக அனைத்துக்கட்சி குழுவினரிடம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உறுதி)

டெல்லி, ஜூலை.17
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை தமிழக அனைத்துக் கட்சி குழு சந்தித்தது.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கும் தமிழக அரசுக்கும் கடும் மோதல் நீடிக்கிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா திட்ட
வட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அணை கட்டும் முடிவில் இருந்து கர்நாடக அரசு பின்வாங்குவதாக இல்லை.
இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இதற்கு தீர்வுக் காண எண்ணிய தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு மூன்று முக்கிய தீர்மானங்களை நிறை வேற்றினார்.
அனைத்துக்கட்சி குழு டெல்லி சென்று மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என மத்திய அரசிடம் மனு அளிக்க வேண்டும் என்பது அந்த தீர்மானங்களுள் முக்கியமானது.
அதன் படி, நீர்வளத்
துறை அமைச்சர் துரைமுருகன் தலை
மையில் அனைத்து கட்சி குழு டெல்லி புறப்பட்டது.
நேற்று பிற்பகல் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்த அனைத்துக்கட்சி குழவினர், மேகதாது பகுதியில் அணைக் கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரக் கூடாது என தெரிவித் துள்ளனர். மேலும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை வழங்கிய தோடு, அணை கட்டினால் தமிழகத்திற்கு நீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்றும் வலியுறுத்தி யுள்ளனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சருட னான சந்திப்பிற்கு பிறகு பேசிய அனைத்துக் கட்சிக் குழுவினர், காவிரி மேலாண்மை ஆணைய ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது. மேலும்,கர்நாடக அரசுக்கு அணையை கட்டுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் உறுதியளித்துள்ளதாக தெரிவித் துள்ளனர்.