கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கர்ணன் திரைப்படம் ரிலீஸ் ஆனது… தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகர் தனுஷ், இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் கர்ணன் திரைப்படம், இன்று காலை 6 மணி முதல் சிறப்பு காட்சிகளோடு நாடு முழுவதும் திரையிடப்பட்டு வருகிறது. இதனால், நடிகர் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்று பரவல் கார்ணமாக கடந்த ஒரு ஆண்டாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தது. அதன் பின்னர் தளர்வுகளுடன் 50% இருக்கைகள் மட்டுமே நிரப்ப வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் திறக்கப்பட்டது, ஆனாலும் திரையரங்குக்கு வரும் ரசிகர்களின் வருகை குறைவாகவே இருந்து வந்தது. கொரோனா நோய் தாக்கம் குறைய தொடங்கியதும் திரையுலகினரின் கோரிக்கை ஏற்கப்பட்டு திரையரங்குகளில் 100%% இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என்ற அரசின் அறிவிப்பால் திரைத்துறை மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் திரைப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், ஏப்ரல் 10-ம் தேதி முதல் மீண்டும் திரையரங்குகளில் 50% இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடியே ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு நேற்று அறிவித்து இருந்தார். அதன்படியே கர்ணன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியோடு இன்று காலை முதல் நாடு முழுவதும் திரையரங்குகளில் கர்ணன் திரைப்படம் வெளியாகி தனுஷ் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்திருக்கிறது.

பரியேறும் பெருமாள் என்ற வெற்றி திரைப் படத்தை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ், தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படத்தை இயக்கி உள்ளார். கிராமத்தில் நடக்கும் கதைக்களத்தை கொண்டு இந்த திரைப்படத்தை அவர் உருவாகி இருக்கிறார். இந்த திரைப் படத்தின் படப்பிடிப்புக்காக, ஒரு கிராமத்தையே செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி முடித்து இருக்கின்றனர்.

கர்ணன் திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து, ராஜீஷா விஜயன், லால், அழகம் பெருமாள், லட்சுமி ப்ரியா சந்திர மெளலி, யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், கெளரி கிஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கண்டா வரச்சொல்லுங்க, கர்ணன் புறப்பாடு, உட்ராதீங்க யப்போ என கர்ணன் படத்திலிருந்து வெளியிடப்பட்ட அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கர்ணன் திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் காலை 6 மணிக்கு திரையிடப்பட்டது. தனுஷ் ரசிகர்கள் மேலம் இசைத்து, உற்சாக நடனம் ஆடி, தனுஷ் பேனர்களும், கட்அவுட்களும் பாலாபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ரோகிணி திரையரங்கில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்,தாணு, இயக்குனர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என ஒட்டு மொத்த கர்ணன் திரைப்பட டீமும் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்து மகிழ்ந்தனர். திரைப்படத்தை கண்ட உற்சாகத்தில் வந்த ரசிகர்கள், தங்கள் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும், கண்டா வரச்சொல்லுங்க… ஓபனிங் பாடலாக அமைந்தது கூடுதல் சிறப்பு என கூறிய ரசிகர்கள், இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ள எங்கள் தனுஷிற்கு, இந்த திரைப்படம் மற்றொரு விருதை கண்டிப்பாக பெற்றுத் தரும் என்று நம்பிக்கையோடு கூறுகின்றனர். அதேபோல், இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.