கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கன்னியாகுமரி பார்லி தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல்! (தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்)

கன்னியாகுமரி, அக்.15
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவ
ரிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதி
காரி சத்யபிரதா சாஹ¨ தகவல் தெரிவித்துள்ளார்
கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் வசந்தகுமார், சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதனால், அவரது கன்னியாகுமரி தொகுதி காலியாக உள்ளது.
இந்த நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவ
ரிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல்
அதிகாரிசத்யபிரதா சாஹ¨ தகவல் தெரிவித்துள்ளார்.
விவிபேட், ஈ.வி.எம் இயந்திரம் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ள சத்யபிரதா சாஹ¨, கொரோனா பாதிப்பு இருக்கும்பட்சத்தில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டுபோட அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தவிர, திருவொற்றியூர் தொகுதி, குடியாத்தம் தொகுதி, சேப்பாக்கம் தொகுதி என தமிழக சட்
டப்பேரவையில் 3 தொகுதிகள் காலியாக உள்ளன. ஒரு தொகுதி காலியாக இருந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல்
நடத்தி, புதிய உறுப்பினரை தேர்வு செய்ய வேண்டும் என்பது கவனிக்
கத்தக்கது.
முன்னதாக, செப்டம்பர் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு எந்த தேர்தலை நடத்தவும் தயாராக உள்ளதாகவும் சத்யபிரதா சாஹ¨ தெரிவித்திருந்த நிலையில், குமரி தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.