கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

பச்சை பட்டுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

மதுரை: பச்சை பட்டுத்தி தங்க குதிரை வாகனத்தில் பக்தர்களின்றி கோயில் வளாகத்தில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்.

கடந்தாண்டு கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிகள் கோயில் வளாகத்திலேயே பக்தர்களின்றி நடத்தப்பட்டது. தற்போது, கொரோனா 2வது அலை பரவல் காரணமாக இந்தாண்டும் கோயில் வளாகத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிக்கு ஆடி வீதியில் செயற்கையாக வைகை ஆறு செட் அமைக்கப்பட்டு இருந்தது. கோயிலில் அமைக்கப்பட்ட தொட்டியில் புனித வைகை ஆற்றின் தண்ணீரை நிரப்பி விழா நடத்தப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர்மாலையை சூடிக்கொண்டு கள்ளழகர் காலை 8:30 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் வைகையில் இறங்குவதாக கருதி அழகர் புறப்பாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பச்சை பட்டுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலித்தார்.

அழகர் கோயிலின் தெற்கு பகுதியில் வைகை ஆறு, ஏ.வி.மேம்பாலம் செயற்கையாக அமைக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுகள், யூடியூப் மூலம் ஒளிப்பரப்பு செய்யப்பட்டுள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுகளை www.tnhrce.gov.in. www.alagarkovil.org என்ற இணையத்தளத்தில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதை கொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 28-ம் தேதி காலை 7:00 மணிக்கு பத்தி உலாத்துதல், காலை 10:30 மணிக்கு சேஷ வாகன புறப்பாடு நடக்கிறது. ஏப்ரல் 29-ம் தேதி காலை 10:00 மணிக்கு மண்டூக முனிவருக்கு மோட்சம் அளித்தல் நிகழ்ச்சியும், ஏப்ரல் 30-ம் தேதி இரவு பூப்பல்லாக்கு நடைபெற உள்ளது.