ஜூலை 12ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்! (முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு கர்நாடகா ‘மேகதாது’ தொல்லை எதிரொலி)

சென்னை, ஜூலை.10&
மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக அனைத்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கிறார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு செய்து வரும் முயற்சிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
டெல்லியில் சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது கூட மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழக நிலைப்பாட்டை விளக்கினார்.
தமிழக விவசாயிகள் நலன் காக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
இருந்தாலும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் இந்த பிரச்சினை குறித்து பேசியுள்ளார்.
ஆனால் மேகதாது அணை அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்று கர்நாடக முதலமைச்சர்
தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
இதற்கு ஸ்டாலின் பதில் கடிதம் எழுதினார்.
மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாடு விவசாயிகள் நலன் பாதிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கியுள்ளார்.
அதேநேரம், மேகதாது விவகாரத்தில் கர்நாடகா உறுதியாக இருக்கிறது. மத்திய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை கர்
நாடகா தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் தான், மேகதாது சூழல் குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினர் எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடிய வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற கட்சி களுடனான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 12-ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கக்கூடிய நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த கூட்டம் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற கட்சிகளுக்கான பிரதிநிதிகளும் பங்கேற்க முதலமைச்சர் முக ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.