கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

இணைகிறது இன்று ரபேல் போர் விமானங்கள்! (இந்தியாவின் அம்பாலா விமானப்படைதளத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன)

டெல்லி, செப்.10&
ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படை சேவையில் இன்று அர்ப்பணிக்கப்படும். 5 விமானங்கள்பட மூலாதாரம், இந்திய விமானப்படையில் ரபேல் போர் விமானங்கள் இன்று முறைப்படி இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.
இதையட்டி ஹரி
யாணா மாநிலம் அம்பா
லாவில் உள்ள விமானப்
படை தளத்தில் நடை
பெறும் நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் நாட்டின் ஆயுதப்படைகள் துறை
அமைச்சர் ஃபுளோ
ரென்ஸ் பார்லி உள்ளிட்
டோர் கலந்து கொள்
கின்றனர்.
இந்திய விமானப் படையின் பலத்தை பெருக்கும் நோக்குடன் பிரான்ஸ் நாட்டின் ரபேல் விமான நிறுவனத்திடம் இருந்து இரட்டை எஞ்சின்கள் கொண்ட 36 போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
அதில் தயாரிக்கப்பட்ட முதல் 10 விமானங்களில் முதலாவது விமானம் கடந்த ஆண்டு அக்டோபர்
மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மேலும் நான்கு விமா
னங்கள் பிரான்ஸில் உள்ள இந்திய தூத
ரகம் வசம் ஒப்படைக்
கப்பட்டன. பிறகு மேலும் ஐந்து விமானங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதில் பிரான்ஸில் உள்ள ஐந்து விமானங் களில் இந்திய விமானப்படை அணியைச் சேர்ந்த வீரர்கள், விமானத்தை இயக்கும் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடு
வார்கள்.
அதில் ஐந்து விமா
னங்கள் இந்தியாவின் அம்பாலாவில் உள்ள விமான படைத்தளத்துக்கு கடந்த ஜூலை 27ஆம் தேதி வந்தன. அவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் ஆயுதப்படைகள் துறை அமைச்சர் ஃபுளோரென்ஸ் பார்லி,
இந்திய பாதுகாப்புப்படை
களின் தளபதி ஜெனரல்
பிபின் ராவத், விமானப்
படை தலைமைத் தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா, பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமார், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்
பாட்டுத்துறை செய
லாளர் டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டி உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
பிரான்ஸ் தரப்பில் அந்நாட்டுக்கான தூதர் எமானுவேல் லெனாயின், பிரான்ஸ் விமானப்படை துணைத் தளபதி ஏர் ஜெனரல் எரிக் ஆட்டுலெட், டஸ்ஸோ ஏவியேஷன் நிறுவன தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்திய விமானப்படை வரலாற்றில் முக்கிய நிகழ்வாக ரபேல் போர் விமானங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவது கருதப்படுகிறது. இதை
யட்டி ரபேல் மற்றும்
தேஜாஸ் போர் விமா
னங்கள் பங்குபெறும் வான் சாகச காட்சிகளுக்
கும் ஏற்பாடு செய்யப்
பட்டுள்ளது.
நாட்டுக்கு அர்ப்பணிக்
கப்பட்டதும் 5 ரபேல் போர் விமானங்கள் அம்
பாலாவில் உள்ள இந்திய விமானப்படையின் 17வது படையணியான கோல்டன் ஏரோஸ் பணி
யில் சேர்க்கப்படும் என்று
இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரி
வித்தனர்.