மீண்டும் தமிழில் விஜய்யுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என பிரபல பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே விருப்பம் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம் ராதே ஷ்யாம். பிரபாஸ§க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார். மேலும் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து சர்கஸ் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தமிழில் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும், விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட ஆசை என்றும், விரைவில் அது நிறைவேறும் என நம்புகிறேன் என பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.