கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

வட்டிக்கு வட்டி கிடையாது வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு! (கொரோனா பாதிப்பு காலகட்டத்தில்… வீடு, வாகனம், கல்வி கடன்களுக்கு பொருந்தும்)

டெல்லி, அக்.25
ஆறு மாதங்களுக்கு கடன் ஒத்திவைப்பு சலுகையை பெற்றவர்
களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கடன் பெற்ற பயனாளிகளுக்கு 2020 மார்ச் 1 முதல் 2020 ஆகஸ்ட் 31
வரை வட்டிக்கு வட்டி வசூலிக்கும் கூட்டு வட்டி
தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விஜயதசமி, ஆயுதபூஜை பண்டிகைகள் கொண்டாடப்படும் நிலை
யில், அடுத்த மாதம் தீபாவளிப் பண்டிகை வரவிருக்கிறது.
பண்டிகைக் கால சலுகையாக மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடன் தவணையை செலுத்த சலுகை அறிவிக்
கப்பட்ட ஆறு மாதங்களுக்கும், வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முறையை தள்ளுபடி செய்யக் கோரிய வழக்கில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டபடி, வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுவது தொடர்பான அறிவிப்பை வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டது. இதன் மூலம் ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்கள் பயன்பெறுவார்கள்.
ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அனைத்து தேசிய வங்ககளில் கடன்
பெற்றவர்களுக்கும் கடன் மீதான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. சிறு, குறு, தொழில் கடன், கல்விக் கடன், வீட்டுக் கடன், தனிநபர் கடன், கிரெடிட் அட்டை கடன், வாகனக் கடன், நுகர்வோர் கடன் பெற்ற பயனாளர்களுக்கு இந்த ஆறு மாதங்களுக்கும் கடன் தவணையில் வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதேவேளையில், கடன் தவணையை செலுத்த சலுகை வழங்கப்
பட்ட தள்ளி வைப்பு காலத்தில் முறையாக கடன் தவணை செலுத்தி
யவர்களுக்கு, அவர்கள் செலுத்திய வட்டிக்கு வட்டித் தொகை அவர்
களது வங்கிக் கணக்கில் வரவு (கேஷ்பேக்) வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த வழக்கின்போது, மத்திய அரசு சார்பில் நிதி அமைச்சகம் உச்சநீதிமன்றத்திடம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியிருந்த படி இந்த உத்தரவை பிரப்பித்துள்ளது.