கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

நடிகர் சூர்யா மீது அவமதிப்பு நடவடிக்கை இல்லை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு

சென்னை, செப்.19&
நடிகர் சூர்யா பொது விசயங்களில் கருத்து கூறும் போது கவனமாக பேசவேண்டும் என்றும் நீதிபதிகளையோ, நீதிமன்றத்தையோ அவமானப்படுத்தும் வகையில் பேசக்கூடாது என்றும் சென்னை உயர்நீ
திமன்ற தலைமை நீதிப
திகள் அமர்வு அறிவுறுத்
தியுள்ளனர். சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவ
டிக்கை எடுக்கப்பட மாட்
டாது என்றும் கூறியுள்
ளனர். நீட் தேர்வு அச்சத்
தால் கடந்த சில தினங்க
ளுக்கு முன்பு தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் மாநிலத்தில் அதிர்வலைகளை உருவாக்
கியது. இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்
டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு பயத்தில் ஒரே
நாளில் மூன்று மாணவர்
கள் தற்கொலை செய்து
கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெ
ழுதப் போகும் மாணவர்க
ளுக்கு வாழ்த்து சொல்வ
தற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்
தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்
திக்கப்படுவது வேதனை அளிக்கிறது என்று குறிப்
பிட்டிருந்தார். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்
ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய்
தேர்வு எழுத வேண்டும்
என்று உத்தரவிடுகிறது என்றும் தெரிவித்
திருந்தார்.மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை
விரலை மட்டும் காணிக்
கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தை
கூட தேர்வெழுதி தனது
தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கி
றார்கள். இதையெல்லாம் கடந்து படித்து முன்னே
றுகிறவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்
கிறார்கள். ஒரே நாளில் நீட் தேர்வு மூன்று மாண
வர்களைக் கொன்று இருக்கிறது. நேற்று நடந்
ததே நேற்றும் நடந்தது. இனி நாளையும் நடக்கும் என்று கூறியிருந்தார்.
சாதரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்
துவர் கனவில் தீ வைக்
கிற நீட் தேர்வுக்கு எதிராக
ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல்
எழுப்புவோம்.. வேதனை
யுடன் என்று குறிப்பிட்
டுள்ளார்.
இந்த நிலை
யில் உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்
றம் நடத்துவதாக கூறும்
நடிகர் சூர்யா மீது நீதி
மன்ற அவமதிப்பு நடவடிக்
கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சா
ஹ§க்கு நீதிபதி எஸ்.எம்.
சுப்ரமணியம் கடிதம் எழுதி இருந்தார்.
சூர்யாவின் கருத்து
மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்
லாமல்,தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது. நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்
படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதே நேரத்தில் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ பி சாஹ§வுக்கு முன்னாள் நீதிபதிகளான சந்துரு, பாட்ஷா, சுதந்
திரம், அரிபரந்தாமன், அக்பர் அலி, கண்ணன் ஆகியோர் கடிதம் எழுதி
யிருந்தனர்.
நீதிபதி எஸ்.எம்.சுப்
பிரமணியம் அனுப்பிய கடிதம் கடந்த 14 ஆம் தேதி
தமிழக அரசின் தலைமை
வழக்கறிஞரின் கருத்து
கேட்புக்காக அனுப்பப்
பட்டது. இதனை ஆய்வு
செய்த தலைமை வழக்
கறிஞர் விஜய் நாராயண், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியமில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.
அரசு தலைமை வழக்கறிஞரின் கருத்தை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை என இன்று உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், கொ
ரோனா பேரிடர் காலத்
திலும் அர்பணிப்புடன் நீதிபதிகள் பணியாற்
றியதாக குறிப்பிட்டுள்ள தலைமை நீதிபதி, காணொலி காட்சி மூல
மாக 42 ஆயிரத்து 233
வழக்குகள் விசாரிக்கப்
பட்டு தீர்வு காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுபோன்று அர்பணிப்
புடன் நீதிபதிகள் பணியாற்
றிய சூழலில் நடிகர் சூர்யா
வின் கருத்து நியாயமான விமர்சனமா என்பதை ஆய்வு செய்ய வேண்டி
யுள்ளதாகவும் தெரிவித்
துள்ளர். மேலும், தனி நபர்
கள் தகவல்களை சரி
பார்த்த பிறகே பொதுத்
தளத்தில் தங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும் எனவும் இல்லாவிட்டால் அது தவறான பல கேள்
விகளுக்கு இடம் கொடுத்து
விடும் எனவும் தெரிவித்
துள்ளனர்.
அரசியல் சாச
னம் அளித்துள்ள பேச்சு
சுதந்திரம் என்பது நியாய
மான விமர்சனத்தையும் உள் அடக்கியது தான் என குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், நடிகர் சூர்யாவின் கருத்
துக்களை ஆய்வு செய்த
போது, பொது விவகாரங்
கள் குறித்து தனி நபர் கருத்து தெரிவிக்கும் போது,
குறிப்பாக நீதிமன்றங்கள், நீதிபதிகள் மற்றும் அவர்
களின் பணிகளை விமர்சிக்
கும் போது எச்சரிக்
கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்
துள்ளார்.
நியாயமான விமர்ச
னங்கள் நீதிமன்ற அவம
திப்பாக கருத முடியாது என்றாலும் கொரோனா காலத்தில் நீதிமன்ற செயல்
பாடுகள் குறித்து முழுமை
யாக அறிந்து கொள்ளா
மல் நடிகர் சூர்யாவின் விமர்சனம் என்பது அவசிய
மில்லாத ஒன்று எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அகரம் அறக்கட்
டளை மூலமாக நடிகர்
சூர்யா ஏழை மாணவர்
களுக்கு இலவச கல்வி
வழங்கி வருவதையும் நீதிபதிகள் தங்கள் உத்த
ரவில் குறிப்பிட்டுள்ளனர்.