கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்க தகவல் ஆணையம் பரிந்துரை!

சென்னை: தமிழகத்தில் 9 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப மாநில தகவல் ஆணையம் தலைமை செயலருக்கு பரிந்துரை செய்து உள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை, கேள்வித்தாள் வடிவமைப்பில் குளறுபடி, தேர்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பிலிருந்த 9 அதிகாரிகளைக் கட்டாய பணி ஓய்வில் அனுப்ப தகவல் ஆணையர் தலைமைச் செயலாளருக்குப் பரிந்துரைந்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக தலைமை செயலருக்கு தகவல் ஆணையம் அனுப்பி உள்ள பரிந்துரை கடிதத்தில், ”தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை. உதவி பேராசிரியர் முதுகலை ஆசிரியர் தேர்வில் வெளிப்படை தன்மை இல்லை. கேள்வித்தாள் வடிவமைப்பில் குளறுபடி ஏற்பட்டது. தேர்வர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தங்கள் எழுதிய விடைகள் தவறு என ஆசிரியர் வாரியம் தெரிவித்தது தவறு என தேர்வர்கள் புகார் அளித்தனர். 5 பேர் மேல்முறையீடு செய்ததில் விசாரணை நடத்தப்பட்டது. 2011-2020 வரை உதவிப்பேராசியர் தேர்வில் முறைகேடு மற்றும் ஒரே தவறு மீண்டும் மீண்டும் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பில் இருந்த 9 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணி ஓய்வில் அனுப்பலாம்” என்று கூறப்பட்டு உள்ளது.

இதனால் 2011-20 வரை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தலைவர்களாக இருந்த சுர்ஜித் சவுத்ரி, விபூ நாயர், ககர்லா உஷா, ஜெகநாதன், சீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா ஆகிய 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் சுர்ஜித், விபு நாயர் தவிர 7 பேர் தற்போது பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.