கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை

லக்னோ, மார்ச்.15
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன்
மிதாலி ராஜ் ஒருநாள் போட்டிகளில் 7 ஆயிரம்
ரன்களைக் குவித்த உலகளவில் முதல் வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
லக்னோவில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதி
ராக 4-வது ஒருநாள் ஆட்டம் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் மிதாலி ராஜ் 26 ரன்களை எட்டியபோது, ஒருநாள் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை எட்டிய வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார்.
மிதாலி ராஜ் தற்போது
216வது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறார். கடந்த 3-வது ஒருநாள் போட்டியின்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் 3 பிரிவுகளிலும் சேர்த்து 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையையும், உலகளவில் 2-வது வீராங்
கனை எனும் சிறப்பையும் மிதாலி ராஜ் பெற்றார்.
மிதாலி ராஜுக்கு வாழ்த்துத் தெரிவித்து பிசிசிஐ ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ அற்புதம் மிதாலி! இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி, ஒருநாள் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ளார். என்ன அருமையான விளையாட்டு” எனத் தெரிவித்துள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகமான மிதாலி ராஜ், ஒருநாள் போட்டியில் முதல்முறையாக 6 ஆயிரம் ரன்களை எட்டிய வீராங்கனை எனும் பெருமையையும் பெற்றிருந்தார். இங்கிலாந்து வீராங்கனை சார்லோட்டே எட்வர்ட்ஸ் 5,992 ரன்கள் சேர்த்த நிலையில் ஓய்வு பெற்றுவிட்டநிலையில், அவரின் சாதனையை மிதாலி முறியடித்தார்.
லக்னோவில் நடந்துவரும் 4-வது ஒருநாள் ஆட்டத்தில் மிதாலி ராஜ் 71 பந்தகுளில் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.