மும்பை, டிச.05
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்து
விட்டது.
முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் 3வது போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் பிடித்து 302 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் தான் பல போட்டிகளுக்கு பிறகு இந்திய அணி டாஸில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
துவக்க வீரர்களும், மிடில் ஆர்டர் வீரர்களும் சொதப்பிய நேரத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சேர்ந்து அணியை கரை சேர்த்ததனர். இதில் ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில் 92 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 50 பந்துகளில் 66 ரன்கள்
எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
50 ஓவர்களின் முடிவில் 302 ரன்கள் எடுத்தது. குறிப்பாக இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா ஒரு தனி பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்.
காயம் காரணமாக முதுகு பகுதியில் செய்துகொண்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் இன்னும் முழுவீச்சில் பந்துவீசவில்லை. அதனால் ஐ.பி.எல் தொடரிலும் முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடினார்.
அதனைத்தொடர்ந்து இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொட
ரிலும் முழுநேர பேட்ஸ்மேனாகவே களமிறங்கி விளையாடி வருகிறார். மேலும் இரண்டு போட்டிகளில் 90 ரன்கள் அடித்து தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கனகச்சிதமாக முடித்தார்.
எப்படி மும்பை அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடினாரோ அதே
போல் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடினார். முதல் போட்டியில் 90 ரன்கள் அடித்த பாண்டியா இரண்டாவது போட்டியில் 31 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து இக்கட்டான சூழ்நிலையில் மூன்றாவது போட்டியில் 76 பந்துகளில் 92 ரன்கள் குவித்து இந்திய அணியின் பெரிய குவிப்பிற்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா பின் இந்த ஆட்டத்தை பார்த்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் பெவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
மேலும் அவரது ஆட்டம் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். இந்த ஆஸ்திரேலிய தொடரில் ஹர்டிக் பாண்டியா பேட்டிங் செய்த் விதம் அவருக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும், அவரது பந்துவீச்சுக்கும் தனக்கு பிடிக்கும் என்று மைக்கல் பெவன் கூறியது குறிப்பிடத்தக்கது.
