கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்: இன்சமாம் உல் ஹக் பாராட்டு

டெல்லி, மார்ச்.09
ரிஷப் பண்ட்டின் பயமில்லாத ஆட்டம் தனக்கு முன்னாள் வீரர் விரேந்திர சேவாக்கை நினைவுபடுத்துவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் போட்டியில் படுதோல்வியடைந்த இந்திய அணி, அடுத்த மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
வீழ்த்தவே முடியாது என கருதப்பட்ட இங்கிலாந்து அணியை, இந்திய அணி அசால்டாக வீழ்த்தியதற்கு அக்ஷர் பட்டேல், அஸ்வின், ரிஷப் பண்ட் ஆகிய வீரர்கள் தான் முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.
இதில் குறிப்பாக இளம் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், பல இக்கட்டான நேரங்களில் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணிக்கு மிகபெரும் சவாலாக திகழ்ந்தார்.
ஆஸ்திரேலிய அணியுடனான கடந்த தொடரிலும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட், இங்கிலாந்து தொடரிலும் மாஸ் காட்டியதன் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் பெற்றுவிட்டார்.
கிரிக்கெட் உலகிற்கு கிடைத்த அடுத்த ஆடம் கில்கிறிஸ்டே இவர் தான் என முன்னாள் வீரர்கள் பலர் ரிஷப் பண்ட்டை
வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில், ரிஷப் பண்ட் குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான இன்சமாம் உல் ஹக், ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு கிடைத்துள்ள இடது கை சேவாக் என பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்சமாம் உல் ஹக் பேசுகையில், ‘ரிஷப் பண்ட் மிகச்சிறந்த வீரர். நீண்ட இடைவேளைக்கு பிறகு, இக்கட்டான நிலையிலும் பயமில்லாமல் விளையாடும் ஒரு வீரரை இப்போது தான் பார்க்கிறேன்.
146 ரன்களுக்கு இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து திணறிய போதிலும், ரிஷப் பண்ட் சிறிதும் பயமில்லாமல் விளையாடினார். சுழற்பந்து மற்றும் வேகப்பந்து என இரண்டையும் ரிஷப் பண்ட் ஒரே மாதிரியாகவே எதிர்கொண்டார்.
அவரது ஆட்டத்தை நான் அதிகம் ரசித்தேன். அவரது பயமில்லாத ஆட்டத்தை பார்க்கும் பொழுது சேவாக் இடது கையில் விளையாடியது போன்றே இருந்தது’ என்றார்.
மேலும் பேசிய இன்சமாம் உல் ஹக், ‘நான் சேவாக்குடன் விளையாடியுள்ளேன், ஆடுகளங்கள் பற்றியோ அல்லது வேறு எந்த பிரச்சனை குறித்தோ சேவாக் கவலைப்பட்டதாக தெரியவில்லை, எது எப்படி இருந்தாலும் அவர் தனது ஷாட்களை பயமில்லாமல் அடித்து கொண்டே இருப்பார். சச்சின், டிராவிட்டை போன்று தற்போது இந்திய அணியில் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் உள்ளனர். ஆனால் பயமில்லாமல் விளையாடும் ரிஷப் பண்ட் எனக்கு சேவாக்கை தான் நியாபகப்படுத்துகிறார்’ என்று தெரிவித்தார்.