டெல்லி, பிப்.23
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட இருப்பதால் அனைத்து அணிகளையும் கலைக்கப்பட்டு புதிதாக அணிகள் அமைக்கப்படும். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்கள் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
2008ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் தற்போது வரை 13 சீசன்கள் முடிவடைந்துள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் ஏப்ரல்/மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. Once all the ten cards are dealt, casino rv parks in reno nv the ten players will be required to reveal their hands. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், 2022 ஆண்டு மிகப் பெரிய ஏலம் நடைபெற இருப்பதால் இந்த ஆண்டுக்கான மினி ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் சிறிதும் எதிர்பார்க்காத பலர் அணிகளில் இடம் பெற்றிருக்கின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பையை பெற்றுத்தந்த ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி அடுத்த ஆண்டு பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டால் இஷான் கிஷன் அல்லது சூர்யகுமார் யாதவ் இருவரில் ஒருவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக செயல்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரே கேப்டன் என்று கூறப்படும் தோனி அடுத்த ஆண்டு கேப்டனாக இருக்க மாட்டார் என்கிறார்கள். இதனால் அனைத்து அணி கேப்டன்களும் இந்த வருட கோப்பையை வெல்வதற்காக தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.