கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கோட்டையில் முதல்முறையாக மு.க.ஸ்டாலின் கொடியேற்றினார்! (75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்பு)

சென்னை, ஆக.16
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வ
ராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக கோட்டையில் கொடியேற்றினார்.
சென்னை: இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப் பட்டது.
கொரோனா விதிமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்
பட்டு நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப் படுகிறது.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வ
ராக பதவியேற்ற பிறகு முதன் முறையாக கோட்டையில் கொடியேற்றினார்.
நாட்டின் 75 ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
சுதந்திர தின விழாவில் காவல்துறையின் அணி
வகுப்பை ஏற்றார் முதலமைச்சர் ஸ்டாலின். இதையடுத்து அவர் சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார்.
தனக்கு கோட்டையில் கொடி யேற்றவாய்ப்பளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
ஏற்றதாழ்வு அற்ற, உயர்வு தாழ்வு அற்ற ஒருமனித உரிமைச் சமூகமாக மாற்றவேண்டும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
-மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் ரூ.6 கோடி செலவில் நவீன முறையில் புதுப்பிக்கப்படும் என்றார் முதல்
வர் மு.க.ஸ்டாலின்.

  • கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 150-வது பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட திட்டம் உள்ளதாகவும் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
    -சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.
    ஸ்டாலின். பல துறைகளில் பல வித விருதுகளையும் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். கொரோனா நோய்த்
    தொற்றில் சிறப்பு பணியாற்றிய மருத்துவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். சிறந்த மாநகராட்சிக்கான விருது தஞ்சாவூர் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.
    நேற்று காலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
    அப்போது பேசிய அவர் இந்த ஆண்டில் பாரதியாரின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் தினம் இது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிக்கு அரசு சார்பில் விழா எடுக்க திட்டம் உள்ளது. மாநிலம் முழுவதும் சுதந்திர தின விழாவில் முதல்வர்கள் கொடி ஏற்ற உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி. இந்த சுதந்திர தின விழாவில் முதல்வராக தேசிய கொடியை ஏற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு என் நன்றிகள் என தெரிவித்துள்ளார்.