கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழ்நாட்டில் ஊரடங்கால் நிதி இழப்பு அதிகம் என்றாலும் மக்களுக்கு தேவையான திட்டங்கள் தொய்வில்லாமல் செயல்படுத்தப்படும் (வேலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி)

வேலூர், ஆக.21&
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்
டங்களில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள், வளர்ச்சிப் பணிகள் குறித்து முதல்வர் பழனி
சாமி நேற்று ஆய்வு செய்தார்.
இதில், ரூ.73 கோடி
மதிப்பிலான புதிய திட்டங்
களுக்கு அடிக்கல் நாட்டி
யதுடன் 18,589 பேருக்கு
ரூ.169.77 கோடி மதிப்பி
லான நலத்திட்ட உதவி
களை வழங்கியதுடன் ரூ.55.03 கோடி மதிப்பி
லான முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்த ஆய்வுக் கூட்
டத்தில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.
வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், வடக்கு
மண்டல ஐ.ஜி. நாக
ராஜன், மாவட்ட ஆட்சி
யர்கள் சண்முக சுந்தரம் (வேலூர்), சிவன் அருள்
(திருப்பத்தூர்), திவ்ய
தர்ஷினி (ராணிப்பேட்டை) மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து மகளிர் குழுவினர், தொழிற்துறையினர், விவசாய சங்க பிரநிதிகளுடன் முதல்வர் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தி
யாளர்கள் சந்திப்பு நிகழ்ச்
சியில் முதல்வர் பழனி
சாமி பேசியதாவது:
“தமிழகம் முழுவதும் இதுவரை 3,57,443 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,96,171 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6,123 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 53,155 பேர் சிகிச்சை பெற்று வருகின்
றனர். தமிழ்நாட்டில் 39,13,529 பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்
பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.20&23 கோடி உணவுக்காக செலவிடப்படுகிறது. இது புதிய நோய். மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால், நமது மருத்துவர்கள் தங்களது திறமையால் நோய்த் தொற்று பரவுவதை தடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஊரடங்கால் நிதி இழப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதற்கு முழுமையாக கணக்கு வரவில்லை. தொழிற்சாலைகள் இயங்கவில்லை, அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாயில் இழப்பு ஏற்பட்டிருந்தாலும் மக்களுக்குத் தேவையான திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் எந்தவித தொய்வும் இல்லாமல் செயல்படுத்தப்படும்.
வேலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை ரூ.648
கோடியில் செயல்படுத்
துவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை அளிக்கும்படி வேப்காஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பேரணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி அணை ரூ.128 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார்.