கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் இன்று முதல் 21 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்வு! (ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரிப்பு)

சென்னை, செப்.01&
தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் ( செப்டம்பர்
1ம் தேதி) முதல் சுங்கக்
கட்டணம் அதிரடியாக உயர்த்தப்படுகிறது.
ரூ.5 முதல் ரூ10 வரை
கட்டணம் உயர்த்தப்படு
வதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர். நாடு முழுவதும்
தேசிய நெடுசாலை ஆணையத்தின் கட்டுப்
பாட்டில் 565 சுங்கச்
சாவடிகள் உள்ளது.
இதில்தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச் சாவடிகள்செயல்படு கிறது. இந்த சுங்கச்சவாடி களில் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் 5 சதவீதம் முதல்
10 சதவீதம் வரை உயர்த்
தப்படுவது வாடிக்கை.
அதன்படி ஒரு பாதி சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதலும் மறுபாதி சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதலும் கட்டணம் உயர்த்தப்படும்.
அந்த வகையில் கடந்த
ஏப்ரல் மாதம் 1ம் தேதி தமிழகத்தில் உள்ள 26
சுங்கச்சாவடிகளில் கட்ட
ணம் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.
ஆனால் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால் கட்டண உயர்வு ஏப்ரல் 16ம் தேதியில் இருந்து தான் நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மீதமுள்ள 21 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் (செப்டம்பர் 1ம் தேதி முதல்) சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இங்கு கட்டணங்கள் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது.
இன்று கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் 21 சுங்கச்சவாடிகளின் விவரம் பின்வருமாறு:
அதன்படி புதூர்
பாண்டியாபுரம் (விருது
நகர்), எலியார்பதி (மதுரை), ராசம்பாளையம் (நாமக்கல்), ஒமலூர், சமயபுரம் (திருச்சி), வீரசோழபுரம் (சேலம்), மேட்டுபட்டி (சேலம்), கொடைரோடு (திண்
டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), பாளையம் (தர்மபுரி), விஜய மங்கலம் (குமார
பாளையம்), திருமாந்
துரை (விழுப்புரம்), செங்
குறிச்சி (உளுந்தூர் பேட்டை), மொரட்
டாண்டி (விழுப்புரம்), வாழவந்தான் கோட்டை
(தஞ்சாவூர்), நத்தக்கரை
(சேலம்), மணவாசி
(கரூர்), வைகுந்தம் (சேலம்) விக்கிரவாண்டி (விழுப்புரம்), திருப்பரைத்
துறை (திருச்சி-கரூர்), பொன்னம்பலப்பட்டி (திருச்சி). ஆகிய சுங்கச்
சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
சுங்க கட்டணத்தை உயர்த்துவதால், சரக்கு
வாகனங்களின் கட்ட
ணமும் உயர்த்தப்படும். எனவே காய்கறி உள்ளிட்ட
அத்தியாவசிய பொருட்
களின் விலை உயரும் என மக்கள் கவலையில் உள்ளார்கள். ஒருபக்கம்
தளர்வு அறிவிக்கப்பட்
டுள்ள நிலையில் மறுபக்கம் சுங்ககட்டணம் உயர்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில். ஏற்கனவே
மக்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக
வாழ்வாதாரம் பாதிக்கப்
பட்டு வாழ்ந்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் வழக்கம் போல் சுங்க
கட்டணத்தை உயர்த்
துவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.