தமிழ்நாட்டில் ஜுலை 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜூலை.17&
தமிழகத்தில் ஊரடங்கு 19&ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 31&ம் தேதி வரை நீடித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கிய நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும்
19&ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு 19&ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். kilox guatemala
இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 31&ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். anti-parasite ivermectin spot on for hamsters and gerbils by beaphar amazon
இதுகுறித்த அறிவிப்பில், கொரோனா நோய்த் தொற்று பரவலைக் குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை 31 வரை தொடர்ந்து அமல்படுத்த மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 25-.3-.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19.7.2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் 31.-7.-2021 காலை 6.00
மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது:
மாநிலங்களுக் கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக) தடை தொடர்கிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்
தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்கு வரத்து தடை.
திரையரங்குகள், அனைத்து மதுக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை. பொழுதுபோக்கு விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் உயிரியல் பூங்காக்களுக்கு தடை. நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள், இறுதிச் சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர்.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பினைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்கள் தட்டச்சு கருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவிகிதம் மாணவர்களுடன், கழற்சி முறையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறி
முறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப் படுகிறார்கள்.
அனுமதிக்கப் பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் பின்வரும் முக்கிய நிலை
யான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படு
வதோடு உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கை யாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
குளிர் சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள், ஜன்னல்கள் திறக்கப் பட்டு போதுமான காற் றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப் படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.