கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழ்நாட்டில் செப்.15 வரை ஊரடங்கு நீட்டிப்பு! (கொரோனா தொடர் அச்சுறுத்தல் எதிரொலி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு)

சென்னை, ஆக.31
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப். 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சமடைந்தது. இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் முதலில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாளை (செப்.1) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், கேரளாவில் இருந்து வரும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன் முடிவுகளைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகளைப் பொதுமக்கள் வீடுகளிலேயே வைத்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.மத விழாக்களை முன்னிட்டு உறியடி போன்ற விளையாட்டுகளை பொது இடங்களில் நடத்தவும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.