கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.10 லட்சம்! (இதுவரை 53.79 லட்சம் பேருக்கு பரிசோதனை)

சென்னை, செப்.08
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு கோடியே 70லட்சமாக அதிகரித்துள்ளது.
8 லட்சத்து 81 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த
இந்த கொடியவகை கொரோனாவுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில் தமிழக
சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை
யில், வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில்
இருந்து தமிழகம் வந்த
வர்கள் உட்பட 5,776 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்
பட்டோரின் எண்ணிக்கை 4,69,256 ஆக அதிகரித்
துள்ளது. நேற்று ஒரே நாளில் 80,503 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் பரிசோ
திக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,79,011 ஆக அதிகரித்
துள்ளது. நேற்று பாதிக்கப்
பட்டவர்களில் 3,369 பேர் ஆண்கள், 2,407 பேர் பெண்கள். 161 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன. நேற்று மட்டும் 89பேர் உயிரிழந்தனர். 36 பேர் தனியார் மருத்து
வமனையிலும், 53 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோ
னாவால் உயிரிழந்த
வர்களின் மொத்த எண்ணிக்கை 7,925 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 5,930 பேர் கொரோனா தொற்றிலிருந்து குண
மடைந்த நிலையில் இது
வரை குணமடைந்த
வர்களின் மொத்த எண்
ணிக்கை 4,10,116 ஆக அதிகரித்துள்ளது. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.