கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் குறைந்தது கொரோனா பாதிப்பு தமிழக சுகாதாரத்துறை அறிக்கையில் தகவல்

சென்னை, அக்.13
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று கோடியே 75 லட்சமாக அதிகரித்துள்ளது.
10 லட்சத்து 8 ஆயிரம் பேர் உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்
பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழக
சுகாதாரத்துறை நேற்றுறு வெளியிட்டுள்ள அறிக்கை
யில், “வெளிநாடு மற்றும்
அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த
வர்கள் உட்பட 4,879 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்
பட்டோரின் எண்ணிக்கை 6,61,264 ஆக அதிகரித்
துள்ளது. தமிழகத்தில் 42 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 5000க்கு குறைவாக பதிவாகியுள்ளது.
நேற்று ஒரே நாளில் 80,162 பேருக்கு கொரோனா
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் பரிசோதிக்கப் பட்டவர்
களின் மொத்த எண்ணிக்கை 84,02,994 ஆக அதிகரித்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 2,877 பேர் ஆண்கள், 2,001
பேர் பெண்கள். 191 பரிசோதனை மையங்கள் தமிழ
கத்தில் உள்ளன.நேற்று மட்டும் 62 பேர்
உயிரிழந்தனர். 29 பேர் தனியார் மருத்துவமனையிலும், 33 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,314 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று 5,165 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,07,203 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளது.