கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் சரிந்த கொரோனா பாதிப்பு ! (குணமடைந்தோர் எண்ணிக்கை 6.63 லட்சமாக உயர்வு)

சென்னை, அக்.25
தமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 7,06,136 கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பேராகும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவல்கள் எப்போதும் மாலை நேரங்களில் சுகாதாரத் துறையினால் வெளியிடப்படும். இந்த நிலையில் நேற்றைய தினம் கொரோனா குறித்த தகவல்கள் வெளியானது. அதில் தமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 7,06,136 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். நேற்று ஒரே நாளில் பிசிஆர் மூலம் 80,237 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 94,36,817 லட்சம் சேம்பிள்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்றைய கொரோனா புள்ளி விவரங்களில் 1,711 ஆண்களும், 1,175 பெண்
களும் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 198 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
நேற்று ஒரே நாளில் 4,024 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 6,63,456 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள்.
நேற்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்
ணிக்கை 35பேராகும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோ
ரின் எண்ணிக்கை 10,893 பேராகும்.நேற்று ஒரே நாளில்
78,896 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்
ளப்பட்டது. இதுவரை 91,78,099 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 31,787 பேர் மருத்து
வமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு 4 ஆயிரத்தை விட கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை 12 வயதுக்குட்பட்டவர்களில் சிறுவர்
கள் 13,173 பேருக்கும் சிறுமிகள் 12006 பேருக்கும் என மொத்தம் 25179 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அது போல் 13 வயது முதல் 60 வயது வரை 3,58,563 ஆண்களுக்கும் 233564 பெண்களுக்கும் என மொத்தம் 594159 பேருக்கும் அது போல் 60 வயதை கடந்தவர்களில் 54504 ஆண்களுக்கும் 32294 பெண்களுக்கும் என மொத்தம் 86798 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.