கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

மதுரையில் தடையை மீறி அரசு-தனியார் பள்ளிகள் திறப்பு! (மாணவ&மாணவியர்க்கு கொரோனா பரவும் அபாயம்)

மதுரை, செப்.18&
மதுரை நகரில் அரசின் தடை உத்தரவை மீறி தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் கடந்த இரண்டு நாட்களாக செயல்பட்டு வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஐந்து மாதங்
களாக கொரோனா பரவல் காரணமாக தடை
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள், பல்
கலைக்கழகங்கள் அரசு
அலுவலகங்கள்தனியார் நிறுவனங்கள் அனைத்
தும் மூடப்பட்டது.
மேலும் தனியார் பஸ் பொதுப்போக்குவரத்து களும் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா பரவல் படிப்
படியாக குறைந்ததை அடுத்து தளர்வுகள் படிப்
படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து, கோவில் திறப்பு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் பள்ளி கல்லூரிகள் பல்
கலைக்கழகங்கள் திரை
யரங்குகள் பொதுக்
கூட்டங்கள் என மக்கள் கூடும் இடங்களுக்கு தடை தொடர்கிறது.
மத்திய அரசு கூட வரும் 21ஆம் தேதி முதல் மாநில அரசுகளின் உத்தரவுகளை பின்பற்றி ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க
லாம் என்று அறிவித்
துள்ளது.
ஆனால் தமிழக அரசு
பள்ளிகள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் குறிப்பாக மதுரை நகரில் பல தனியார் பள்ளிகள் கடந்த இரண்டு நாட்களாக பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறந்து பாடம் நடத்துகின்றன.
மேலும் பெற்றோர்க
ளிடமும் ஒப்புதல் வாக்கு
மூலம் வாங்கி மிரட்டு
கின்றனர். சில தனியார்
பள்ளிகள் பள்ளிக் கட்ட
ணத்தை முழுவதுமாக கட்டச் சொல்லி மிரட்டு
வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனியார் பள்ளிகள் அரசு உத்தரவை மீறுவது ஒன்றும் புதிதல்ல ஆனால்
மதுரை நகரில் உள்ள அரசு பள்ளிகள் மாநக
ராட்சி பள்ளிகள் கூட
கடந்த இரண்டு நாட்களாக பத்தாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள
மாணவர்களுக்கு பள்ளி
களை திறந்து பாடம் நடத்துவது வேதனையான விஷயம்.
அரசு உத்தரவை அரசு பள்ளிகளில் மதிக்காத போது தனியார் பள்ளிகளை குறை கூற முடியாது.
இதுகுறித்து மதுரை
மாவட்ட கல்வி அதிகாரி
ஒருவர் கூறுகையில் மதுரையில் தனியார் பள்ளிகள் திறந்
திருப்பதும் மாணவர்களை அழைத்து பாடம் நடத்து
வதும் தொடர்ந்து கொண்
டிருப்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.
இதுகுறித்து நடவ
டிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகள் பெற்
றோர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்றுக்கொண்டு பள்ளி மாணவர்களை வரவழைப்பது சட்டப்படி குற்றமாகும்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வரவில்லை என்றார். மேலும் பிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் மக்கள் பாதுகாப்பு கழகம் நிர்வாகி மணிகண்டன் கூறுகையில் கடந்த 2 நாட்களாக மதுரையில் அரசு உத்தரவை மதிக்
காமல் பல தனியார் பள்ளிகள் அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இந்த பள்ளிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவ
லரிடம் புகார் அளித்
தும் முறையான நடவ
டிக்கை எடுக்கவில்லை. மேலும் தனியார் பள்ளிகள்
பழைய கல்வி கட்டணம் மற்றும் புதிய கல்வி கட்டணம் செலுத்த பெற்
றோர்களை நிர்ப்பந்
திப்பதுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. அப்படியான பள்ளிகள் மீது சட்டப்படி நடவ
டிக்கை எடுக்கவேண்டும் என்றார்