கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கேரளா-மேற்கு வங்காளத்தில் 9 தீவிரவாதிகள் கைது! (இந்தியா முழுவதும் தாக்குதல் திட்டம் முறியடிப்பு)

கேரளா, செப்.20&
பாகிஸ்தானை சேர்ந்த அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் ஆதரவுடன் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிருந்த ஒன்பது தீவிரவாதிகளை மேற்குவங்கம் மற்றும் கேரளாவில் நேற்று நடந்த சோதனையில் கைது செய்துள்ளதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று அதிகாலை கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத்தில் பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்திதில், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஆறு பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் மூன்று பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று
என்.ஐ.ஏ. தெரிவித்
துள்ளது.
அப்பாவி மக்களைக் கொன்று, நாட்டின் முக்கிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த அல்கொய்தா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு வருவதாக தேசிய புலனாய்வு அமைப்
புக்கு தகவல் கிடைத்த
தாக ஏ.என்.ஐ. முகமை வெளியிட்டுள்ள செய்தி
யில் குறிப்பிடப்பட்
டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த 11ஆம் தேதி வழக்குப்பதிவு செய்த என்.ஐ.ஏ அமைப்பு
விசாரணையை தொடங்
கிய நிலையில், தற்போது ஒன்பது பேர் கைது செய்யப்
பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்
பட்டவர் களிடமிருந்து மின்னணு சாதனங்கள், ஆவணங்கள், ஜிஹாதிய இலக்கியம், கூர்மையான ஆயுதங்கள், நாட்டு ரக துப்பாக்கிகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உடல் கவசம், வீட்டில் வெடிக்கும் சாதனங்களை தயாரிக்க உதவும் கட்டுரைகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானை சேர்ந்த அல்-கொய்தா தீவிரவாதிகளால் சமூக ஊடகங்கள் வாயிலாக தூண்டப்பட்ட இவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்ட
மிட்டிருந்தது ஆரம்ப கட்ட
விசாரணையில் தெரிய
வந்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களில் எர்ணா
குளத்தைச் சேர்ந்த முர்ஷித் ஹசன், ஐயாகுப் பிஸ்வாஸ், மொசராஃப் ஹொசென் மற்றும் மேற்குவங்கத்தில் முர்ஷிதாபாத் பகுதியில் வசித்து வரும் நஜ்மஸ் சாகிப், அபு சுஃபியன், மைனுல் மொண்டல், லியு யீன் அகமது, அல் மாமுன் கமல் மற்றும் அதிதுர் ரெஹ்மான் ஆகியோர் அடக்கம்.
கைது செய்யப்பட்ட
வர்களில் சிலர் நிதி உதவியை திரட்டவும், மேலும் சிலர் டெல்லிக்கு சென்று துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கவும் திட்டமிட்டிருந்
ததாக முதற்கட்ட விசார
ணையில் தெரிய வந்துள்ளது.
இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னர் அந்தந்த மாநிலங்களில் உள்ள உள்ளூர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் அதன் பிறகு விசாரணைகள் முழு
வீச்சில் நடைபெறு
மென்றும் அந்த செய்தி
யில் குறிப்பிடப்பட்
டுள்ளது.