கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

சென்னையில் 5-ம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை! (அத்தியாவசிய பணிக்கு செல்வபர்கள் மட்டும் பயணம் செய்ய நிபந்தனை)

சென்னை, அக்.03
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையான ஊரடங்கு உத்தரவு தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பிறப்பிக்கப் பட்டிருந்தது.
இருப்பினும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பல்வேறு
தளர்வுகள் அறிவிக்கப்
பட்டதை அடுத்து தற்போது கிட்டத்தட்ட இயல்பு நிலை தெரிந்து
விட்டது
இருப்பினும் சென்
னையில் புறநகர் ரயில்
சேவை தொடங்காமல் இருந்ததால் பொது
மக்கள் அதிருப்தியில் இருந்தது. இந்த நிலை
யில் சென்னையில் வரும் 5ம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை துவங்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் இந்த ரயில்
சேவை அத்தியா
வசிய அரசு பணியாளர்
களுக்கு மட்டுமே இயக்
கப்படும் என அறிவித்
துள்ளது. மருத்துவம், மின்சாரம், பால் வினியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் இருப்பவர்கள் மட்டுமே இந்த ரயிலில் பயணம் செய்யலாம்
மேலும் தமிழக அரசால் அங்கீகரிக்கப் பட்டவர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்க
லாம் என்றும் அவர்கள் அங்கீகரிக்கப்
பட்ட அடையாள அட்டையை பயணத்தின்போது காண்பிக்க வேண்டும்
என்றும் தெற்கு ரயில்வே அறிவித்
துள்ளது.
சென்னை சென்ட்
ரல் மற்றும் கடற்
கரை ரயில் நிலையத்
திலிருந்துதமிழக அரசில்பணியாற்றக் கூடிய ஊழியர்களுக்
காகவும் இந்தரயில் இயக்கப்படும் என்று
அறிவிக்கப் பட்டுள்ளது. ஐந்தாம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டாலும் அனைத்து தரப்பினருக்கும் இந்த சேவை இல்லை என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.