கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

ஆந்திராவில் காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது புயல்! (75 கி.மீ வேகத்தில் காற்று வீசியது)

சென்னை, அக்.14
மணிக்கு 75 கிமீ வேகம் வரை வீசிய புயல் காற்றுடன் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், நேற்று காலை காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது.
கடந்த 9-ந்தேதி அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழ
கத்தில் கடந்த 9ந் தேதி பெரும்பாலான இடங்களில்
மழை பெய்தது.
வங்கக்கடலில் மத்தியமேற்கு பகுதியில் நிலை கொண்டு இருந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
வங்க கடலில் மத்தியமேற்கு பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் மாலை மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடா அருகே நேற்று கரையைக் கடந்துள்ளது. கரையை புயல் கடந்த போது மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம் முதல் 75 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசியது. அத்துடன் ஆந்திராவின் கடலோரப் பகுதி
களில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஸ்ரீககுளம், விஜயநகரம் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்
டிராவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே நேற்று மாலை சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
தமிழகத்தில் அதிகபட்சமாக மாமல்லபுரம், பெரியாறு, திருக்கழுக்
குன்றம் பகுதிகளில் 30மிமீ மழை பெய்தது. சின்ன கல்லார், காஞ்சிபுரம், உத்தரமேரூர் சோளிங்கர் 20 மிமீ மழை பெய்தது.
இதனிடையே வெப்ப சலனம் காரணமாக வங்கக் கடலில் வளி மண்டலமேலடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திரு
வள்ளூர், கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், கோவை, தேனி, திண்டுக்கல், கன்னி
யாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மாவட்டங்
களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, ஆந்திரா கடலோரப் பகுதியில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இடையிடையே சில நேரங்களில் மணிக்கு 75 கிமீ வேகத்திலும் வீசியது. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளிலும் பலத்த காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசியது.
இதனால் இந்த இடங்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்
டாம் என எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில், வங்கக் கடலில் ஆழ்ந்த
காற்றழுத்தம் இருப்பதை காட்டும் புயல் எச்சரிக்கை கூண்டுகள் சென்னை எண்ணூர், கடலூர், உள்ளிட்ட துறைமுகங்களில் ஏற்றப்
பட்டிருந்தன.