கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும்! – சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தரைக்காற்று வடமேற்கில் இருந்து தமிழகத்தை நோக்கி வீசுவதால், தமிழகத்தில் இன்று (மார்ச் 31) முதல் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர்,  ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் சுட்டெரிக்கும். திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூரிலும் வெயில் அதிகரிக்கும். திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி வரை உயரக்கூடும்.

மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளது. வெயில் மற்றும் அனல்காற்று காரணமாக  முற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிக்க வேண்டும். அதேபோல், வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக பிற்பகல் 12 மணி முதல் 4 மணிவரை வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதை தவிர்ப்பது நல்லது என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.