கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

அரசு ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடு! (தமிழக அரசு அதிரடி அறிவிப்பு கொரோனா தொற்று தாக்கம் எதிரொலி)

சென்னை, மே.22&
தமிழகத்தில் கொரோனா வைரசால் மக்கள் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசு பல கோடி ரூபாயை செலவு செய்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஒவ்வொரு மாநிலமும் மிகப்பெரிய அளவில் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகின்றன. சில மாநிலங்கள் நிதி நெருக்கடியால் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கை வைத்துள்ளது.
ஆனால் தமிழக அரசு அதுபோன்ற நடிவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் செலவினங்களை குறைக்கும் வகையில் அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. இது தொடர்பாக அரசாணையும் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
கொரோனாவால் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியால் அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை.
நடப்பு நிதியாண்டில் மொத்த செலவினத்தில் 20 சதவீதத்தை குறைக்க தமிழக அரசு முடிவு.
நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி.
மதிய விருந்து, இரவு விருந்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுரை.
சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மட்டுமே உபகரணங்களை கொள்முதல் செய்ய அனுமதி.
மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதி.
அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி இல்லை.
விளம்பரச் செலவுகளை 25 சதவீதம் குறைத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விழாக்களில் பரிசுப் பொருட்கள், பூக்கொத்துகள் கொடுப்பது நிறுத்தப்படும். 20 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் எல்லாவிதமான அரசு விழாக்களும் ரத்துசெய்யப்படும். அரசு விருந்துகள் அனைத்தும் ரத்துசெய்யப்படும்.
இந்தச் செலவினக் குறைப்பைச் செயல்படுத்தும் பொறுப்பு, அந்தந்தத் துறைகளின் செயலர்களைச் சாருமென தமிழக அரசின் அரசாணை தெரிவிக்கிறது.