கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

“குரு பெயர்ச்சி 2020… தமிழகம் முழுவதும் குரு ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள்!”

சென்னை: குருபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள குருஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நவகிரகங்களின் குருவாக போற்றப்படும் குருபகவான், ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு தங்குகிறார். அதன் பிறகு, அடுத்த ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதன்படி இந்த ஆண்டு ஆட்சி வீடான தனுசு ராசியில் இருந்த குருபகவான், நேற்று இரவு 9.48 மணிக்கு (15.11.20) மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

இதை முன்னிட்டு, பிரதான குரு ஸ்தலமான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகளும், ஹோமங்களும், பஞ்சமூர்த்திகள் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. அப்போது பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, குருபகவானை தரிசனம் செய்து குரு பகவான் அருள் பெற்று சென்றனர். இந்த பூஜைகள் அனைத்தும் இணையத்திலும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, வழிகாட்டு நெறிமுறை விதிகளின்படி, ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே, குருபெயர்ச்சி விழாவில், ஒரு மணிநேரத்திற்கு, 200 பேர் வீதம், 14ம் தேதி முதல், தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என, கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆன்லைன் பதிவு பற்றி தெரியாத, வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் வந்ததால், நேரடி கட்டண தரிசனத்திற்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த குருப்பெயர்ச்சியால், ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலனை குருபகவான் அளிப்பார் என கணிக்கப்பட்டுள்ளது. குருபெயர்ச்சியையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு ஸ்தலங்களில் சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்றன.

இதேபோல், குருவுக்கு உகந்த தலங்களில் ஒன்றான தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயம், சென்னை பாடி திருவல்லீஸ்வரர் ஆலயம், தென்குடி திட்டை, திருச்செந்தூர், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், மீனாட்சி-சொக்கநாதர் ஆலயம், புதுச்சேரி அருகே உள்ள மொரட்டாண்டியில் அமைந்துள்ள விஸ்வரூப சனீஸ்வர பகவான் ஆலயம் என தமிழகத்தில் உள்ள அனைத்து குரு ஸ்தலங்களிலும் குருபெயர்ச்சி சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டன.