கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

“திருச்செந்தூர் கடற்கரையில்தான் சூரசம்ஹார விழா!” – தமிழக அரசு தகவல்

மதுரை: பாரம்பரிய முறைப்படி திருச்செந்தூர் கடற்கரையில்தான் சூரசம்ஹார விழா நடத்தப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கோவிலில் கடந்த 15-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் விரதமிருந்து வந்து சூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டு முருகப்பெருமான் அருள் பெற்று செல்வது வழக்கம். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியை காண பக்தர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டது.

மேலும், சூரசம்ஹார நிகழ்வு கடற்கரையில் வழக்கம் போல் நடைபெறாது என்றும், சூரசம்ஹாரத்தை வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் பக்தர்கல் காணலாம் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், ”திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் வருகின்ற 20-ம் தேதி சூரசம்ஹார விழா வழக்கம் போல் கடைக்கரையில் தான் நடத்தப்படும். திருக்கல்யாணம் கோயில் உள்பிரகாரத்தில் 21-ம் தேதி 108 மகா தேவர் சன்னதி அருகே நடத்தப்படும்” என்று கூறினார்.

இதை கேட்ட நீதிபதிகள், ”கொரோனா சூழலில் மக்கள் பங்கேற்பு இல்லாமல் சூரசம்ஹார நிகழ்ச்சியை நடத்த வேண்டும். முருக பக்தர்கள் காணும் வகையில் சூரசம்ஹாரம், திருக்கல்யாண நிகழ்ச்சிகளை அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப வேண்டும்” என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.