கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

டிசம்பர் 31ம் தேதி வரை செல்லுபடியாகும்! (காலாவதி லைசென்ஸ்சுகள் மத்திய அரசு அதிரடி சலுகை)

சென்னை, ஆக.25&
இந்த ஆண்டின் இறுதி வரையில் டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க
மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்
பட்டது.
பொதுப் போக்கு
வரத்துச் சேவைகள் முடக்கப்பட்டு, பொது
மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே
வரமுடியாத சூழல் இருந்ததால் தங்களது
ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்ட ஆவணங்களைப் புதுப்பிப்பது இயலாமல் போனது.
இதைக்கருத்தில் கொண்டு மேற்கூறிய ஆவணங்களுக்கான செல்லுபடி காலம் ஏற்கெனவே மூன்று முறை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ஊரடங்கு காலம் மேலும் நீடிப்பதால் ஆவணங்களுக்கான செல்லுபடி காலம் டிசம்பர்
மாதம் வரையில் நீட்டிக்
கப்படுவதாக நேற்று
அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மோட்டார் வாகனச் சட்டம் 1988 மற்றும் மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1989 ஆகியவற்றின் கீழ் பொதுமக்கள் தங்களது வாகனங்களின் தகுதிச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வாகனங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்கள் 2020 பிப்ரவரி 1 முதல் 2020 டிசம்பர் 31 வரையிலான காலத்தில் காலாவதியாகும் சூழல் இருந்தால் அவை வருகிற டிசம்பர் 31 வரையில் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்
டுள்ள இந்த உத்தரவை அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் உடனடியாக அமல்
படுத்த வேண்டும் எனவும், இதன்மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலிலும்
பொதுமக்கள், ஓட்டு
நர்கள், நிறுவனங்கள் உள்ளிட்டவை அத்தியா
வசிய தேவைகளுக்
காகத் தடையின்றி செயல்பட முடியும்
எனவும் தெரிவிக்கப்பட்
டுள்ளது.
தற்போதைய புதிய
உத்தரவின்படி, இந்த ஆண்டின் இறுதி வரையில்
அதுவரையில் ஓட்டுநர்
களும், பொதுமக்களும் பிரச்சினையின்றித் தங்களது வாகனங்களை இயக்கலாம்.