கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் சிறப்பு பூஜை

சேலம், ஆக.23&
விநாயகர் சதுர்த்தி
தினமான நேற்று முதல்
வர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்துடன் விநாய
கரை வழிபட்டார்.
அபிஷேகம் ஆரா
தனை செய்து பிள்ளை
யாருக்கு படையல் போட்டு
வழிபட்ட முதல்வர் பயபக்தி
யோடு தோப்புக்கரணம் போட்டு வழிபட்டார்.
முழு முதற்கடவுள் பிள்ளையாருக்காக விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை
நிறுவவும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்
டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து கொண்டாடி வருகின்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் சிறிய அளவிலான விநாயகர் சிலை வைத்து பால் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்தார்.
அதனைத்தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அலங்
காரம் சிறப்பு பூஜை செய்து அவரின் குடும்பத்தினருடன் விநாயகரை வழிபட்டார்.
பய பக்தியோடு விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போட்டு தரிசனம் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.
எவ்வினையையும் தீர்க்கும் விநாயகர், இவ்வினையையும் தீர்க்க சேலத்தில் எனது
குடும்பத்துடன் வழிபட்டேன்
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்
துக்கள் என்று தனது ட்விட்டர்
பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.